News August 21, 2024

12 மாவட்டங்களில் கனமழை

image

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Similar News

News August 15, 2025

உடலின் கழிவுகளை நீக்கும் லெமன் டீ

image

லெமன் டீ அருந்தும்போது *எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், & தாமிர சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தரும், மனஅழுத்தம் நீங்கவும் உதவும் *மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும். SHARE IT!

News August 15, 2025

திமுகவின் வரலாறு இப்படிதான்: அண்ணாமலை சாடல்

image

குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பதே திமுக வரலாறு என அண்ணாமலை சாடியுள்ளார். நாகர்கோவில் திமுக நிர்வாகி ராஜன், கோயிலுக்கு ஒதுக்கிய ஒன்றரை கோடி நிதியை சுருட்டி விட்டதாகவும், இது குறித்து DVAC-ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சமூக விரோதிகளை வளர்த்துவிடும் திமுகவிற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 15, 2025

INTERNET வந்து இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவு

image

3G, 4G, 5G எல்லாம் வந்தாச்சு… அடுத்து 6G எப்ப வரும்ணு காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், 1995-ல் இதே நாளில், இந்தியாவில் பொதுமக்களுக்காக இணைய சேவை அறிமுகமான போது, அதன் வேகம் 9.6 kbps மட்டுமே (விவரங்களுக்கு படத்தை பார்க்க). VSNL தான் ஆரம்பத்தில் சேவை வழங்கியது. அதன்பின் தனியார் நிறுவனங்கள் நுழைய, இன்று 70 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தினமும் இணையம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!