News May 13, 2024

இன்று 10 மாவட்டங்களில் கனமழை

image

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கோவை, திருப்பூர் மற்றும் குமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், இதர மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ., முதல் 40 கி.மீ வரை) மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News April 3, 2026

புதிய கருத்துக்கணிப்பு.. தமிழகத்தில் அதிமுக ஆட்சி

image

Republic டிவி தரப்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும், அதனால் ஆட்சி மாற்றம் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதில், விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவுக்கே அதிக பாதிப்பு எனவும் கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

IPL: முதல் வெற்றியை பெறுமா CSK?

image

IPL-ல், இன்று CSK, PBKS அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகின்றன. RR-க்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த CSK, தொடரின் முதல் வெற்றியை உள்ளூரில் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் CSK வீரர்கள் ஜொலித்தாலே போட்டியில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர். பிரெவிஸ் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. PBKS அணியும் வலுவாக இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.

News April 3, 2026

மோடியின் வருகை = திமுகவின் வெற்றி: ஸ்டாலின்

image

வெளிநாட்டில் வாழும் PM மோடி, தேர்தல் சீசனில் மட்டுமே தமிழகம் வருவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் பிரசாரம் செய்த ஸ்டாலின், 2024 தேர்தலில் PM மோடி ரோடு ஷோ நடத்திய போது திமுக 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். இம்முறையும் அவர் ரோடு ஷோ நடத்தினால் 200 தொகுதிகளில் வெற்றி என்ற திமுகவின் இலக்கு உறுதியாகிவிடும் எனவும் ஸ்டாலின் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!