News October 22, 2024
கனமழை: நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக கோவை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவையின் பல பகுதிகளில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. நாளையும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
தேர்தலில் நிற்காமலேயே 9 முறை CM

2005 முதல் (2014 மே – 2015 பிப்., தவிர) இன்று வரை பிஹார் CM-ஆக நிதிஷ் தொடர்கிறார். 35 ஆண்டுகளாக போட்டியிடாமலேயே 9 முறை CM-ஆக இருந்த அவர், இந்த முறையும் போட்டியிடவில்லை. ஆனாலும், அவர்தான் CM என பேச்சு அடிபடுகிறது. இதற்கு காரணம், பிஹாரில் சட்டசபை மட்டுமின்றி சட்ட மேலவையும் உள்ளது. இதன்மூலம் அவர் நேரடியாக தேர்தல் களத்தில் குதிக்காமல், சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாகி முதல்வராக தொடர்கிறார்.
News November 15, 2025
மீண்டும் இணையும் பிரபாஸ், ராஜமௌலி காம்போ!

பாகுபலி படத்தின் மூலம் பிரபாஸை பான் இந்தியன் ஸ்டாராக மாற்றியவர் ராஜமௌலி. இந்நிலையில், பிரபாஸை வைத்து அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். இம்முறை பேண்டஸி படமாக அல்லாமல், ஒரு நல்ல குத்துச்சண்டை படமாக எடுக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபாஸ் தற்போது சலார் 2, கல்கி 2, ராஜாசாப் படங்களில் பிஸியாக இருப்பதால் அடுத்த ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 15, 2025
BREAKING: விலை ₹5,000 குறைந்தது

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் மளமளவென்று குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹5 குறைந்து ₹175-க்கும், கிலோ வெள்ளி ₹5,000 குறைந்து ₹1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹3,000, இன்று ₹5,000 என 2 நாளில் வெள்ளி விலை மொத்தம் ₹8,000 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரும் நாள்களிலும் வெள்ளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


