News November 15, 2024
4ஆவது நாளாக கனமழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து 4ஆவது நாளாக இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 முதல் 15 நிமிடங்கள் மழை சடசடவென பெய்கிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பகலிரவாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. நீங்க இருக்கிற ஊருல மழை பெய்யுதா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 2, 2026
BREAKING: பொதுத்தேர்வில் 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்

+12 மாணவர்களுக்கு இன்றுமுதல் பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல் நாளில் சுமார் 10,000 பேர் மொழித்தேர்வை எழுதவில்லை. பள்ளி மாணவர்கள் 8,319 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 1,600 பேர் இன்றைய தேர்வை தவறவிட்டதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வில் எந்த மாணவர்களும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களே தேர்வு எப்படி எழுதியிருக்கீங்க?
News March 2, 2026
நாளை சந்திர கிரகணம்.. இதெல்லாம் செய்யக் கூடாது!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, <<19280134>>சந்திர கிரகணத்தின்போது<<>> வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கக் கூடாது. கோவிலுக்கு செல்லக் கூடாது. கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது. மேலும், கிரகணம் முடிந்த பிறகு சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டுமாம். அதன்படி, வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். மேலும், கோயிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கி வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். SHARE IT.
News March 2, 2026
PM அலுவலகம் மீது தாக்குதல்: நெதன்யாகுவின் நிலை என்ன?

இஸ்ரேல் PM நெதன்யாகுவின் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் IRGC படை தெரிவித்துள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த நேரத்தில் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா, அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்ததா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் இஸ்ரேலிய விமானப்படை தளபதியின் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.


