News May 16, 2024
அடுத்த 5 நாள்களுக்கு அதி கனமழை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்காக இன்றும், மே 20ஆம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவிருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யவிருக்கிறது. வடக்கு மாவட்டங்களில் மட்டும் அதிக மழையை எதிர்பார்க்க முடியாது.
Similar News
News December 4, 2025
சற்றுமுன்: Ex ஆளுநர் காலமானார்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுஷல் (73) இன்று காலமானார். மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ், மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் ஆவார். இவரது மறைவுக்கு பாஜக உள்பட பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்வராஜ் கவுஷல், தனது கடின உழைப்பால் நாட்டிற்கு நிகரில்லா பணிகளை செய்துள்ளார் என பாஜக புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
News December 4, 2025
புடின் தங்கும் அரண்மனை பற்றி தெரியுமா?

2 நாள் பயணமாக இந்தியா வரும் புடின், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் தங்குகிறார். தான் வாழ்ந்த காலத்தில் உலகின் பெரும் பணக்காரராக விளங்கிய ஐதராபாத்தின் கடைசி நிஜாம் ஒஸ்மான் அலி கான் கட்டிய அரண்மனைதான் இது. வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தில் 8.2 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் தற்போதைய மதிப்பு ₹170 கோடிக்கும் அதிகமாகும். 36 அறைகள், செயற்கை நீருற்று என பல ஆடம்பர வசதிகள் இதில் உள்ளன.
News December 4, 2025
ஸ்டாலினின் சூழ்ச்சியால் பிரச்னை எழுந்தது: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போலீசாரை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் CM ஸ்டாலின் செயல்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஸ்டாலினின் பிரித்தாலும் சூழ்ச்சியினால் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்கிவருவதால் திமுக நடுக்கத்தில் இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.


