News January 19, 2025

விடிய விடிய கனமழை

image

சென்னையில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இது தொடர்பான அறிக்கையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. உங்க ஊர்ல மழை பெய்யுதா?

Similar News

News March 5, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

image

தங்கம் விலை இன்றும் (மார்ச் 5) மளமளவென குறைந்துள்ளது. இதன்படி, 1 கிராம் தங்கம் ₹80 குறைந்து ₹15,120-க்கும், 1 சவரன் ₹640 குறைந்து ₹1,20,960-க்கும் விற்பனையாகிறது. போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேளையில், இந்திய சந்தையில் தங்கம் விலை குறைந்து வருகிறது.

News March 5, 2026

போர் பதற்றம்.. தொடரை தள்ளிவைத்த ICC!

image

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, நேபாளத்தின் கீர்திபூரில் நடைபெற இருந்த ODI WC லீக்-2 தொடரின் 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ODI உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்காக நடத்தப்படும் இந்த தொடரில் நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத இருந்தன. தொடர் நடைபெறும் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ICC அறிவித்துள்ளது.

News March 5, 2026

விஜய்யுடன் யார் பேசுனா? செல்வப்பெருந்தகை

image

விஜய்யுடன் யாரும் கூட்டணி குறித்து பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதேநேரம், வேறு யாரேனும் தனிப்பட்டு பேசியிருந்தால், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக – காங்., தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கூடுதலாக 3 + 1 தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!