News August 12, 2024
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகாலையிலும் மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
Similar News
News March 4, 2026
உடல் பருமன்.. பிரச்னையா? நோயா?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் <<18704186>>சர்வதேச உடல் பருமன் தினம் <<>>இன்று அனுசரிக்கப்படுகிறது. உடல் பருமனை வெறும் வாழ்க்கை முறை பிரச்னையாக மட்டுமின்றி, ஒரு நோயாக அங்கீகரிப்பது முக்கியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தீவிர டயட், மருத்துவ சிகிச்சை என்பதை தாண்டி, உடல் பருமனுடன் போராடும் ஒவ்வொருவரையும் ஆதரவளிக்க வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்துகின்றனர்.
News March 4, 2026
விஜய் நிகழ்ச்சியில் விபத்து.. ஒருவர் கவலைக்கிடம்

தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜய் சென்றபோது, அவரது காரை பின்தொடர்ந்து பலரும் பைக்கில் சென்றனர். அப்போது நிகழ்ந்த விபத்தில் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் கவலைக்கிடமான நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அதிக அளவு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
News March 4, 2026
விஜய்யின் இயக்குநர்கள் ஆதவ், அருண்ராஜ்: ஜெயக்குமார்

விஜய் நடிப்பில் கைத்தேர்ந்தவர் என்பதால் எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டை ஆக்ஷனுடன் மேடையில் பேசுகிறார் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அவரை ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் இயக்குநர்களாக இருந்து இயக்குவதாகவும் சாடியுள்ளார். விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசமுடியுமா என கேள்வி எழுப்பிய அவர், ஏதோ தனக்குத்தான் தில்லு, திராணி இருப்பதுபோல் வேடிக்கை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.


