News December 31, 2024
3 மாவட்டங்களுக்கு இன்று கனமழை ALERT

தென் மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-28ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து 5வது நாளாக இந்த விலை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
கொந்தளித்த பிரித்விராஜ் தாய்

பிருத்விராஜின் தாய் மல்லிகா, தனது மகன் வேண்டுமென்றே மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் பிருத்விராஜ் நடித்த ‘விலயாத் புத்தா’ படம் மற்றும் படக்குழுவினர் மீது SM-யில் கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மல்லிகா, ‘என் மகன் மீது திட்டமிட்டே வெறுப்பு பரப்பப்படுகிறது. SM-யில் அவரை அவமதிப்பதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
டிட்வா புயலின் வேகம் குறைந்தது: IMD

சென்னையில் இருந்து 510 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 4 கிமீ வேகத்தில் பயணித்து வந்த புயல் இப்போது 3 கிமீ அளவுக்கு தனது வேகத்தை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்கெனவே 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


