News October 21, 2024
13 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News July 6, 2025
சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள்

ஜூலை 7-ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திர பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 டோக்கன்களும், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்களும், அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 150 சாதாரண டோக்கன்கள், 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News July 6, 2025
டெஸ்ட் வரலாற்றை இங்கிலாந்து மாற்றுமா?

2-வது டெஸ்டில் இங்கிலாந்து 608 என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இங்கிலாந்துக்கு தனது பேட்டிங்கை தொடங்கிவிட்டது. ஆனால் இங்கிலாந்து இந்த இலக்கை எட்ட முடியுமா? இதற்கு முன்னதாக 2003-ம் ஆண்டு அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 418 ரன்களை சேஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றை இங்கிலாந்து மாற்றுமா?