News April 25, 2024
பறவைக் காய்ச்சல் காரணமாக எல்லையில் கடும் சோதனை

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், தமிழக எல்லையில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையில் உள்ள கோழி, வாத்துப் பண்ணைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு முற்றிலும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
ஒரே நேரத்தில் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த சதி

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. 8 பேர், தலா 2 பேர் கொண்ட 4 குழுக்களாக பிரிந்து சென்று, மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வரும் PM

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 19-ம் தேதி PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
News November 13, 2025
BREAKING: இபிஎஸ் உடன் மீண்டும் சேருகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் இபிஎஸ் உடன் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இணைவார் என்று பேச்சு அடிபட்ட நிலையில், அதிமுகவுக்கு திரும்பினால் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக EPS தரப்பு உறுதியளித்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் வைத்திலிங்கம், நலம் பெற்று திரும்பியதும் அதிமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.


