News May 7, 2025
தமிழகத்தில் 40 டிகிரியை தொட்ட வெயில்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக, வேலூரில் 40.5 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக, கரூர் பரமத்தி – 40°C, ஈரோடு – 39.6°C, சேலம் – 39°C, தர்மபுரி – 38.2°C, மதுரை – 38°C, சென்னை – 37.7°C, திருச்சி – 37.7°C, திருப்பத்தூர் – 37.2°C, கடலூர் – 37°C என அதிகபட்ச வெப்பம் பதிவானது. தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அந்தப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது.
Similar News
News December 6, 2025
விஜய் தொகுதியில் போட்டியிடுவேன்.. அறிவித்தார்

2026 தேர்தலில் விஜய்க்கு எதிராக களம் காண்பேன் என NTK கொள்கைப்பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். விஜய் போட்டியிடும் தொகுதியின் விவரம் வெளியான பிறகு, தானும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு சீமானிடம் அவர் அனுமதி கேட்டுள்ளதாக NTK வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காரணமாகவே, நேற்று வெளியான <<18478564>>NTK முதற்கட்ட வேட்பாளர்கள்<<>> பட்டியலில் அவரது பெயர் இல்லை என கூறப்படுகிறது.
News December 6, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. ஆட்சியர் அறிவித்தார்

சென்னையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிச.2-ல் மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுப்பை ஈடு செய்யும் வகையில் பள்ளிகள் செயல்படவுள்ளன. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிச.2-ல் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
புடினுக்கு PM மோடி அளித்த பரிசுகள்!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த அதிபர் புடினுக்கு PM மோடி பல்வேறு பரிசுகளை அளித்துள்ளார். முதல் நாளில் பகவத் கீதையை பரிசளித்த PM மோடி, அடுத்ததாக பாரம்பரியம் கொண்ட பல்வேறு மாநிலப் பொருட்களை கொடுத்துள்ளார். இதில் மகாராஷ்டிராவின் தயாரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை, அசாம் டீ தூள், முர்ஷிதாபாத் டீ செட், மார்பிள் செஸ் செட், காஷ்மீர் குங்குமப்பூ உள்ளிட்டவை அடங்கும். போட்டோக்களை SWIPE செய்து பாருங்க..


