News April 24, 2024
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகா வடக்கு, ம.பி. கிழக்கு, உ.பி. கிழக்கு, ஒடிசா, மேற்குவங்கத்தில் வெப்ப அலை வீசும். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 7, 2026
நயினாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் துயரில் <<18762471>>நயினாரின்<<>>
குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என அவர் தெரிவித்துள்ளார். போலீஸ் கூறிய இடத்தில் விஜய்யின் வாகனத்தை நிறுத்தாதது, மாற்றுப்பாதையில் சென்றது பற்றி நயினார் பேசவில்லை என்றும், நடந்தவை குறித்து தெரியாமல் குறுகிய மனப்பான்மையுடன் சொன்ன கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
News January 7, 2026
சேலையில் மிளிரும் ‘சிங்காரி’ ❤️❤️

‘றெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவதை மச்சான்’ என்ற வசனத்திற்கு நடிகை மமிதா பைஜூ உயிர் கொடுத்திருக்கிறாரா என தோன்றுகிறது. இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த ரீசண்ட் போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். வண்ணச் சேலையில் மின்னும் பூவாய் க்யூட்டான ரியாக்ஷன் கொடுக்கும் ‘விஜய்யின் ரீல் மகள்’ மமிதாவின் போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து நீங்களும் பாருங்க!
News January 7, 2026
அமைச்சர் ரகுபதியை கண்டித்த அண்ணாமலை

நாவடக்கம் இன்றி திரியும் திமுகவினருக்கு, TN மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பை விமர்சித்து சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும், பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது என்று அமைச்சர் ரகுபதி பேசியது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் X-ல் அண்ணாமலை சாடியுள்ளார்.


