News April 27, 2024

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை

image

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதிதீவிர அனல் காற்றுவரை வீசுமென்று ரெட் அலர்ட் விடுத்துள்ள IMD, பிஹார், ஜார்கண்ட், தெலங்கானா, ராயலசீமா, உள்கர்நாடகா, தமிழ்நாடு, கிழக்கு உத்தரப் பிரதேச பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை வீசுமென்றும் தெரிவித்துள்ளது.

Similar News

News January 24, 2026

இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

image

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

News January 24, 2026

இந்த கூட்டணிக்கு டிக் அடிக்கப்போகிறாரா விஜய்?

image

தவெகவிடம் தற்போது இரண்டு தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. NDA கூட்டணிக்கு அழைக்கும் பாஜக, கேட்கும் தொகுதிகள், கைகாட்டுபவர்களுக்கு MP சீட், Dy CM சீட் தருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் டெல்லி காங்கிரசும் பேசிவருவதாக சொல்கின்றனர். எனவே கூட்டணி வைத்து போட்டியா, தனித்து போட்டியா என பனையூரில் தீவிர ஆலோசனை நடந்துவருவதாக தகவல் கசிந்துள்ளது.

News January 24, 2026

ஜன.27-ல் ஜன நாயகன் வழக்கில் தீர்ப்பு

image

‘ஜன நாயகன்’ பட சென்சார் வழக்கு தொடர்பாக ஜன.27 காலை 10.30 மணிக்கு சென்னை HC தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்லாது, விஜய் ரசிகர்களும் குஷியில் உள்ளனர். ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால் பிப்ரவரி 2-வது வாரத்திலேயே ஜன நாயகன் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

error: Content is protected !!