News March 16, 2024
சேலத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று(மார்ச்.15) மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Similar News
News September 23, 2025
சேலம்: மாமன்ற கூட்டம் ஆணையாளர் அறிவிப்பு!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற செப்-25ஆம் தேதி வியாழக்கிழமை பகல் 11 மணி சேலம் மாநகராட்சி மாதாந்திர இயல்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு ஏற்று தங்களது கோட்டங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் குறைகளை தெரிவிக்க வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.
News September 23, 2025
சேலம்: ரபி பருவ சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு!

சேலம் மாவட்டத்தில் ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீடடுத் திட்டத்தில், காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என சேலம் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத்தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
சேலம்: 42 நாட்கள் 252 முகாம்கள் 2,17,618 மனுக்கள்!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகம் துவங்கியது. அதன்படி கடந்த 19-ம் தேதி வரை 42 நாட்கள் 252 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் அரசு கூறிய 43 சேவைகளில் 65,320 மனுக்களும், மற்ற சேவைகள் கோரி 38,571 மனுக்களும், வரப்பட்டு உள்ளது. இது மட்டும் இன்றி கலைஞர் உரிமைத்தொகை கேட்டு 1,13,727 மனுக்கள் வரப்பட்டுள்ளது மொத்தம் 2,17,618 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.