News September 28, 2025
இதயம் நொறுங்கியது: விஜய் கண்ணீர்

கரூரில் நிகழ்ந்த துயரத்தால் இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என விஜய் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனை, துயரத்தில் உழன்று கொண்டிருக்கிறேன் எனவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
என் தலைமையில் ஆட்சி அமைந்தால்.. சசிகலா

திமுகவில் ஓர் அமைச்சர் தவறு செய்தால், அவரை நீக்கம் செய்ய CM ஸ்டாலின் பயப்படுவதாக சசிகலா விமர்சித்துள்ளார். மா.சு., பேச்சு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு எதிராக பேசிக்கொண்டு எப்படி அமைச்சராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஜெ., எப்படி செயல்பட்டார்களோ, அதேபோல என் தலைமையில் ஆட்சி நடைபெறும்போது, குற்றச் செயல்கள் இருக்காது என்றும் தெரிவித்தார்.
News January 2, 2026
புதிய புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

புத்தாண்டு அன்றே தென் மாவட்டங்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் ஜன.6-ஐ ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் டெல்டா & தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு குறைவு என்றும் IMD தெரிவித்துள்ளது.
News January 2, 2026
மீண்டும் வருகிறது BTS!

உலகமெங்கும், குறிப்பாக இந்தியாவில் BTS-க்கு ரசிகர்கள் அதிகம். கட்டாய ராணுவ சேவை உள்ளிட்டவற்றால், 2022-க்கு பின் BTS குழுவாக எந்த பாடலையும் வெளியிடவில்லை. 4 ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டில் இனிப்பான செய்தி வந்துள்ளது! மார்ச் 20-ல் BTS-ன் புதிய ஆல்பம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, <<18699958>>Wold Tour<<>> பற்றியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


