News September 28, 2025
கரூர் சம்பவத்தால் மனவேதனை: பவன் கல்யாண்

விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என ஆந்திரா DCM பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இறந்தவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார்.
Similar News
News September 28, 2025
விஜய் செல்லாதது ஏன்?

கரூர் துயரச் செய்தி வந்தவுடனே செ.பாலாஜி, அன்பில் மகேஸ் கரூர் ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர். CM ஸ்டாலினும் கூட கரூர் விரைந்துள்ளார். இந்நிலையில், விஜய் சென்னை திரும்பிவிட்டார். இந்நிலையில், பலரும் விஜய் ஏன் செல்லவில்லை எனக் கேட்கின்றனர். சம்பவத்தால் விஜய் மிகத் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாலும், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாததாலும் தான் உடனடியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
News September 28, 2025
இழப்பீட்டை ₹50 லட்சமாக உயர்த்த திருமா வலியுறுத்தல்

கரூர் அசம்பாவிதத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். போர்கால அடிப்படையில் காயம் அடைந்தவர்களுக்கு சிசிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உயிரிழந்தோருக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ₹10 லட்சம் இழப்பீட்டை, ₹50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
News September 28, 2025
எங்கு திரும்பினாலும் மரணம் ஓலம்..

கரூரில் எங்கு திரும்பினாலும் மரணம் ஓலம் கேட்பதால், இந்த இரவு தமிழக மக்களுக்கு துக்க இரவாக மாறியிருக்கிறது. உயிரிழந்தவர்களை நினைத்து, ஒவ்வொரு வீட்டிலும், தெருக்களிலும் மக்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால், தற்போதே CM ஸ்டாலின் கரூர் புறப்பட்டு செல்கிறார்.