News August 28, 2025

மனதை வருடும் மாளவிகா மோகனன்

image

விஜய்யின் ‘மாஸ்டர்’, விக்ரமின் ‘தங்கலான்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மாளவிகா மோகனன். தமிழில் இப்போது பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் மலையாளத்தில் கலக்கி வருகிறார். நடிப்பை தாண்டி இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக இருப்பவர் மாளவிகா. மாடர்ன், ஹோம்லி என இரண்டிலும் கலக்கும் அவர், சேலையணிந்து எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களை கவர்ந்த போட்டோஸை மேலே கண்டு மகிழுங்கள்.

Similar News

News August 28, 2025

BREAKING: வெள்ளத்தில் சிக்கி ஒரு குடும்பமே அழிந்தது

image

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் கனமழை காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை காரில் கடக்க முயன்றபோது, தமிழகத்தை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர், மனைவி, 2 மகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News August 28, 2025

நாதகவில் மீண்டும் இணையவுள்ள காளியம்மாள்?

image

நாதகவில் இருந்து வெளியேறிய காளியம்மாள், தவெகவில் இணைய இருப்பதாக பேச்சுகள் எழுந்தது. இதற்கிடையே அதிமுக, திமுகவிலும் அவர் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஆஃப்பர்கள் எதுவும் கைகூடி வராததால் மீண்டும் தாய்வீடான நாதகவிலேயே இணைய அவர் அடி போட்டு வருவதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக சீமானுக்கும் அவர் தூது பறக்கவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

News August 28, 2025

உங்களை நேசிக்க கற்று கொள்ளுங்கள்!

image

நம்மை ஏன் யாருக்கும் பிடிக்கமாட்டேங்கிறது என யோசித்திருக்கிறீர்களா? ஏன் தேவையில்லாமல் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு கொண்டு, உங்களை தாழ்த்திகொள்கிறீர்கள்? நீங்களே உங்களை நேசிக்காதபோதுதான் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பீர்கள். தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள். நம்மை நாமே காதலிக்கவில்லை என்றால், நம்மை அடுத்தவர்கள் நேசிப்பார்கள் என நம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

error: Content is protected !!