News August 30, 2025

ஹார்ட் டாக்டர், ஹார்ட் அட்டாக்கில் மரணம்

image

சென்னையில் இளம் இதய அறுவை சிகிச்சை நிபுணர், மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவீதா மெடிக்கல் கல்லூரியில் ஆலோசகராக பணியாற்றிய கிராட்லின் ராய்க்கு(39), ஆக.27-ம் தேதி பணியிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சக டாக்டர்கள் போராடியும், அவரை காப்பாற்ற முடியவில்லை. நீண்டநேர பணி, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பல டாக்டர்கள் உயிரிழப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். RIP

Similar News

News August 31, 2025

வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 31)

image

*1957 – பிரிட்டிஷ் அரசிடம் இருந்து மலேசியா விடுதலை பெற்றது
*1969 – இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜவகல் ஸ்ரீநாத் பிறந்த நாள்
*1979 – சினிமா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்
*1997 – வேல்ஸ் இளவரசி டயானா, பாரிசில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
* 2020 – இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நினைவு தினம்

News August 31, 2025

இவரே ODI கேப்டனுக்கு தகுதியானவர்: ரெய்னா

image

அடுத்த ODI உலககோப்பைக்கு இப்போது இருந்தே வலுவான அணியை உருவாக்க நினைக்கும் BCCI, ரோகித்துக்கு பதில் புதிய கேப்டனை தேட தொடங்கியுள்ளது. தகுதியான நபர் சுப்மன் கில்லா, ஸ்ரேயஷ் ஐய்யரா என BCCI யோசித்து வருகிறது. ஆனால், ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவே ODI-க்கு சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். தோனியின் தோற்றத்தை ஹர்திக்கிடம் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News August 31, 2025

பென்ஷன் கேட்டு ஜெகதீப் தன்கர் விண்ணப்பம்

image

முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஒப்புதல் கிடைத்தால், தன்கருக்கு மாதம் ₹42,000 ஓய்வூதியம் கிடைக்கும். உடல்நலக் காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பிறகு, தன்கர் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறார். இது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!