News July 6, 2025

ஒரே பரிசோதனையில் மாரடைப்பை கண்டறியலாம்..!

image

LPA சோதனை மூலம் நமக்கு ஹார்ட் அட்டாக் வருமா என்பதை அறிந்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். LPA என்பது கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படுகின்ற LDL கொழுப்பின் ஒரு பகுதியாகும். இதன் அளவு அதிகரித்தால் பெருந்தமனி, இதய நோய்க்கான வாய்ப்புகள் உள்ளது என அர்த்தம். இச்சோதனை முடிவில் நமக்கு 30க்குள் அளவு இருந்தால் நார்மல், 30-50க்குள் இருந்தால் அது பார்டர், 50க்கு மேல் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

Similar News

News July 6, 2025

FLASH: கி.வீரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு

image

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி(91) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி, மயக்கம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News July 6, 2025

மீன்களின் விலை குறைவு.. அலைமோதும் மக்கள் கூட்டம்!

image

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது. சென்னை காசிமேடு, தூத்துக்குடி, நாகை மீன்பிடி துறைமுகங்களில் மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. சென்னையில் மீன்கள் விலை குறைந்து 1 கிலோ நெத்திலி- ₹150, சீலா- ₹350, இறால்- ₹300, சங்கரா மீன்- ₹150, மத்தி- ₹100, வஞ்சிரம்- ₹700, நண்டு- ₹150, வாவல் மீன்- ₹500-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் நாகையில் மீன்கள் விலை சற்று அதிகரித்துள்ளது.

News July 6, 2025

பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்: PM மோடி

image

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என டிரினிடாட் & டொபாகோ பார்லிமென்ட்டில் PM மோடி பேசியுள்ளார். அவையில் பெண் MP-க்கள் அதிகமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக கருதுவதாகவும் கூறினார். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கான மரியாதை ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும், நவீன இந்தியாவை உருவாக்க பெண்களின் கரங்களை வலுப்படுத்துகிறோம் என்றும் கூறினார். அடுத்த லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வருகிறதோ?

error: Content is protected !!