News September 26, 2025
7 நாள்களுக்கும் ஹெல்தியான லஞ்ச் லிஸ்ட் ரெடி

‘மத்தியானம் ஃபுல் கட்டு கட்டுறோம்’ என்ற பேச்சு இன்றும் நம்மிடம் இருக்கிறது என்றால், மதிய உணவு மீதான அலாதி பிரியமே காரணம். அதற்காக மணக்க மணக்க பிரியாணியை மட்டுமே எப்போதும் சாப்பிட விடமுடியாது. எனவே, நமது ஊருக்கு ஏற்றதுபோல், சிறந்த, எளிதான மற்றும் சத்தான மதிய உணவு வகைகளை மேலே கொடுத்துள்ளோம். அதை swipe செய்து பார்த்துவிட்டு, உங்களுக்கு பிடித்ததை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News September 26, 2025
சற்றுமுன்: கனமழை வெளுத்து வாங்கும்

திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 26, 2025
நீல நிற ஆதார் அட்டை தெரியுமா?

UIDAI தான் நீல நிற ஆதார் அட்டையை வழங்குகிறது. இது 5 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும். அதன் பின், புதுப்பிக்க வேண்டும். இதனை பெற, UIDAI இணையதளத்தில் புதிய ஆதாரை தேர்ந்தெடுக்கவும். அதில், பெற்றோர்களின் தகவல்களை கொடுத்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழையும் பதிவிட வேண்டும். இதன்பின்னர் 60 நாள்களில் ஆதார் அட்டை வழங்கப்படும்.
News September 26, 2025
₹565 போட்டால், ₹10 லட்சம் கிடைக்கும் செம்ம திட்டம்

Post Office Insurance Policy Scheme-ல் ஆண்டுக்கு ₹565 பிரீமியம் செலுத்தினால், ₹10 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இந்த பாலிசியின் மூலம், ஒருவர் இயற்கையாக மரணமடைந்தாலோ, ஊனமுற்றாலோ, partial disability ஆனாலோ இந்த தொகையை பெறலாம். 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று கணக்கை தொடங்கலாம்.