News August 23, 2025
HealthTips: காலை/இரவு உணவை தவிர்த்தால் எடை குறையுமா?

உடல் எடையை குறைக்க காலை/இரவு உணவை Skip செய்கிறீர்களா? இத்தவறை செய்தால் உங்களால் எப்போதும் எடையை குறைக்க முடியாது என டாக்டர்கள் சொல்கின்றனர். காலை/இரவு உணவை தவிர்ப்பது உங்களது பசியை தூண்டுமாம். இதனால் நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக உணவை உட்கொள்ள நேரிடும் என்கின்றனர். இதோடு, கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மெட்டபாலிசமும் குறையுமாம். நீங்க இந்த மாதிரியான Diet இருந்துருக்கீங்களா?
Similar News
News August 23, 2025
விஜய் பேச்சில் சவடால் மட்டும் தான்: திருமாவளவன்

திமுக வெறுப்பு என்பதே தவெக மாநாட்டில் அவர்கள் உமிழ்ந்த அரசியல் என திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 மாநாடுகள் முடிந்தபின்பும் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் என்னவென்பது அவர்களுக்கே புரியவில்லை என்றார். மேலும் லட்சம் பேரை திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே விஜய் முன்வைத்திருப்பதாகவும், அவரது பேச்சில் கருத்தும் இல்லை, கருத்தியலும் இல்லை என்றும் சாடினார்.
News August 23, 2025
மூலிகை: கிட்னி கல்.. சைனஸ், சளி.. கற்பூரவல்லி போதும்!

➤எளிதாக தோட்டத்தில் வளர்ந்தாலும், சளி, சைனஸ் அவ்வளவு ஏன் கிட்னி கல்லுக்கும் சிறந்த மருந்தாக கற்பூரவல்லி உதவும்.
➤கற்பூரவள்ளி இலையின் சாற்றுடன், தேன் கலந்து குடித்தால், சளி & இருமல் விலகும்.
➤கற்பூரவல்லி இலைகளை நசுக்கி சொறி, அரிப்பு ஏற்படும் இடங்களில் பூசினால், தோல் நோய் விலகும்.
➤கற்பூரவல்லி இலையின் சாற்றை குடித்தால், அஜீரணக் கோளாறு விலகும். SHARE IT.
News August 23, 2025
விஜய் பேச்சுக்கு நோ கமெண்ட்ஸ்.. அமைச்சர் ரகுபதி

திமுக, அதிமுக, நாதக, பாஜகவை கடுமையாக அட்டாக் செய்ய விஜய் தொடங்கிவிட்டார். இந்நிலையில், எம்ஜிஆர் வளர்த்த அதிமுக யாரிடம் இருக்கிறது என்பதை விஜய்யே தேடி பார்த்து சொல்லட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை விஜய் விமர்சனம் செய்வது அவர்களுக்குள் இருக்கும் புரிதல்தான்; ப்ரோவாக இருந்தாலும், அங்கிளாக இருந்தாலும் அவர் குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார்.