News April 8, 2025
Health Tips: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் பப்பாளி

பெண்களுக்கு மாதவிடாய் நெருங்கிவரும் நாட்களில், பப்பாளி சாப்பிட்டால் உடனே மாதவிடாய் வர வாய்ப்புள்ளது. இதற்கு சூடு மட்டுமே காரணமல்ல. பழமாகாத பப்பாளியில் இருக்கும் papain, carpaine என்ற சத்துகள், கருப்பை சுருங்கி கரு முட்டைகள் உடைய தூண்டலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின் போன்றவை ஹார்மோன் உற்பத்தியை தூண்டி மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது. SHARE IT.
Similar News
News November 10, 2025
நாட்டை உலுக்கிய துயரம்… PM மோடி இரங்கல்

டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி சம்பவம் குறித்து அமித்ஷா மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும் அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.
News November 10, 2025
பெரும் சோகம்… நெஞ்சை உலுக்கும் PHOTOS

இன்று மாலை 6.52 மணிக்கு டெல்லியே பேரதிர்ச்சியில் ஸ்தம்பித்தது. செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் உடல் சிதறி 10 பேர் பலியானது பெரும் துயரம். சம்பவ இடத்தின் போட்டோஸ் வெளியாகி காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன. அதன்மூலம், கோர நிகழ்வின் தீவிரத்தையும் அங்கிருந்தவர்களின் மரண ஓலத்தையும் நம்மால் எளிதில் உணர முடிகிறது. உறவுகளை இழந்து தவிப்பவர்களை என்ன சொல்லி தேற்றுவது?
News November 10, 2025
அப்பாவி மக்கள் பலியானது வேதனை அளிக்கிறது: CM

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிப்பதாக அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை சுக்குநூறாக நொறுக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.


