News November 16, 2024

Health Tips: மூச்சடைப்பின் அறிகுறிகள் இருந்தால்…

image

மூச்சு விடுவது கடினமாக இருப்பது & வாய் திறந்து மூச்சு விட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை மூச்சிரைப்பு பாதிப்பு என டாக்டர்கள் கூறுகின்றனர். நெஞ்சில் இறுக்கமாகவோ, அழுத்தமாகவோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவது, மூச்சு விடும்போது விசில் சத்தம் கேட்பது, நெஞ்சில் வலி, வறட்டு (அ) சளி கலந்த இருமல் உண்டாவது போன்ற மூச்சடைப்பின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

Similar News

News March 1, 2026

நாளை தொடங்குகிறது அரசு பள்ளி மாணவர் சேர்க்கை

image

தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை முதல் அடுத்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 1, 2026

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அதிக முதலீடு: PM மோடி

image

மதுரையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ₹4,400 கோடிக்கும் அதிகமான திட்டங்களை PM மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ₹880 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் பாஜக அரசு அதைவிட 9 மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

தேர்தல் அறிக்கை எப்போது முதல்முறையாக வந்தது?

image

1931-ல் கராச்சி காங்., மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களை, 1937 தேர்தலில் காங்., தேர்தல் அறிக்கை வடிவில் முதல்முறையாக கொண்டுவந்தது. 1957 பேரவை தேர்தலின்போது ‘திராவிட நாடு’ என்ற தனிநாடு கோரிக்கையை தமிழக அரசியலில் முதல் தேர்தல் அறிக்கையாக திமுக முன்வைத்தது. 1967 தேர்தலில் தேர்தல் அறிக்கை (திமுக) முழு வடிவம் பெற்றது. அடுத்தடுத்து அதிமுக, பாமக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கின.

error: Content is protected !!