News September 21, 2025
HEALTH TIPS: இந்த உணவுகளை தவிர்க்க வேண்டாம்!

மூளையின் செயல்பாடு, ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு அன்றாடம் போதுமான அளவு வைட்டமின் பி12 எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், முட்டை, இறைச்சியில் இந்த சத்து அதிகளவு கிடைக்கிறது. உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் பால், யோகர்ட், சீஸ், மோர், பனீர் ஆகியவற்றை உணவுமுறையில் சேர்ப்பது அவசியம். பால், யோகர்ட் சாப்பிடாதவர்கள் பாதாம், சோயா, ஓட்ஸ், டோஃபு போன்றவற்றை சாப்பிட்டு பி12 சத்து பெறலாம். SHARE IT.
Similar News
News September 21, 2025
பண மழை கொட்டப் போகும் 3 ராசிகள்

இன்று இரவு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால், 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுதாம். *ரிஷபம்: முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும். வணிகத்தில் லாபம் பெருகும். *சிம்மம்: தொட்டதெல்லாம் வெற்றியாகும். தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம், வருமானம் பெருகும். *துலாம்: தொடர்ந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். சொத்து வாங்க வாய்ப்பு.
News September 21, 2025
வங்கிகள் உங்கள் போனை LOCK செய்தால் என்ன ஆகும்?

லோனில் வாங்கிய போனுக்கு EMI கட்டவில்லை எனில், அதை <<17684875>>லாக் செய்ய <<>>வங்கிகளுக்கு அனுமதி அளிக்கும் வழிமுறையை RBI பரிசீலித்து வருகிறது. போன் என்பது அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாதது ஆகும். வேலை, படிப்பு, அத்தியாவசிய சேவைகள், பணப் பரிமாற்றம் எல்லாவற்றுக்கும் போன் தேவை. அப்படியிருக்க போனை லாக் செய்வது ஒருவரது வாழ்வாதாரத்தை முடக்குவது ஆகாதா? இதனால் அந்தரங்க தகவல்கள் திருடப்படாதா? என கேள்விகள் எழுகிறது.
News September 21, 2025
BCCI தலைவராகும் முன்னாள் டெல்லி வீரர்!

ரோஜர் பின்னிக்கு பிறகு, BCCI-யின் தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் டெல்லி வீரர் மிதுன் மன்ஹஸ் முந்துவதாக தகவல் வெளிவந்துள்ளது. தலைவர் பதவிக்காக யாருமே விண்ணப்பிக்காத நிலையில், தற்போது வரை மிதுன் மட்டுமே விண்ணப்பித்துள்ளார். IPL-ல் இவர் RCB, GT, PBKS போன்ற அணிகளின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். 1997- 2017 வரை 157 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய மிதுன் 9714 ரன்களை குவித்துள்ளார்.