News August 22, 2025
Health Tips: அடிக்கடி மூட்டு வலி வருதா? ஆபத்து!

இப்போதெல்லாம் இளம்வயதினர் கூட மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அடிக்கடி மூட்டு வலி ஏற்படுவது ஆபத்தான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள். யூரிக் அமிலம் அதிகரிப்பு, எலும்பு தேய்மானம், உயர் ரத்த அழுத்த அபாயம் ஆகியவற்றுக்கு மூட்டு வலிதான் முதல் அறிகுறியாம். இதனால் அடிக்கடி மூட்டு வலி ஏற்படுகிறவர்கள் டாக்டரை அணுகுவது சிறந்தது. மூட்டு வலி இருக்குற உங்க ஃப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 22, 2025
BREAKING: பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்கா – அண்டார்டிகா கண்டங்களுக்கு இடையே உள்ள டிரேக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதால், ராட்சத கடல் அலைகள் தோன்றியுள்ளன. குறிப்பாக சிலி மற்றும் அர்ஜெண்டினா நாடுகளுக்கு தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரஷ்யா, ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.
News August 22, 2025
நடிகர்கள் கலைக்கான கருவி மட்டுமே: ஷ்ருதிஹாசன்

ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் தென்னிந்திய சினிமாவில் உண்டு என ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டை ஒப்பிடுகையில் தென்னிந்திய சினிமாவில் நிறைய பணம் இருந்தாலும் ஆடம்பர ஆடை அணிய மாட்டார்கள், பலர் இன்றும் அம்பாசிடர் கார்களையே பயன்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளார். மேலும், நடிகர்களாகிய நாம் கலைக்கான ஒரு கருவி மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
News August 22, 2025
மூலிகை: தோல் நோய்களுக்கு குப்பைமேனி போதும்

➤சிறு செடியாக இருந்தாலும், குப்பைமேனி அனைத்து சரும பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
➤குப்பை மேனி இலையின் சாற்றை சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து, சொறி- சிரங்கு பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவலாம்.
➤குப்பைமேனி இலைச்சாற்றை தேங்காய் எண்ணெய் & மஞ்சள் தூள் சேர்த்து, சூடாக்கி, பிறகு ஆரவைத்து சருமத்தின் மீது தடவினால் சிறு சிறு காயங்கள் மற்றும் வெட்டுகளும் மறையும். SHARE IT.