News April 12, 2025
Health Tips: ஆளி விதையின் நன்மைகள்..!

ஆளி விதையின் அளவு சிறியது. ஆனால், அதன் பயன் பெரியது. இதனை பொடி செய்து மோரில் கலந்து பருகலாம். இதில், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இதிலுள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் கேன்சர் தாக்கத்தை எதிர்த்து போராடும். ஆளி விதையின் கரையாத நார்ச்சத்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. SHARE IT.
Similar News
News November 13, 2025
பிஹார் தேர்தல்: ஆட்டம் காண போகும் பங்குச்சந்தைகள்

பிஹார் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த முடிவுகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பிஹாரில் NDA கூட்டணி தோற்றால், மத்தியில் புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அரசியல் தடுமாற்றத்தால், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி போன்ற முக்கிய குறியீடுகள் 5 முதல் 7% வரை குறுகிய கால சரிவை சந்திக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
News November 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 518 ▶குறள்: வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். ▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.
News November 13, 2025
IND vs SA: முதல் டெஸ்ட்டில் நிதிஷ் விடுவிப்பு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டி விடுவிக்கப்படுவதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோசெட் தெரிவித்துள்ளார். இன்று தொடங்க உள்ள தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ODI தொடரில் நிதிஷ் கலந்து கொள்வதால், அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட்டில் துருவ் ஜுரெல் விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். IND vs SA டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது.


