News September 10, 2025
Health: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? ஜாக்கிரதை

PCOS, PCOD அறிகுறிகள் பற்றி சரியாக தெரியாததால் இதனை சில பெண்கள் கவனிப்பது கிடையாது. அதன் அறிகுறிகளை தெரிந்துக்கொள்ளுங்கள். ➤சீரற்ற மாதவிடாய் சுழற்சி ➤அதிகமாக உடல் எடை கூடுவது/குறைவது ➤கருப்பை கட்டிகள் ➤சரும பிரச்னைகள் ➤சோர்வாகவே இருத்தல் ➤தூக்கமின்மை ➤அதீத ரத்த போக்கு. சில சமயங்களில் PCOS அறிகுறிகள் காட்டாது. எனவே, பெண்கள் 8 மாதங்களுக்கு ஒருமுறை Ultra Sound Scan எடுப்பது நல்லது. SHARE.
Similar News
News March 2, 2026
தாக்குதலில் கமேனியின் மனைவி மரணம்

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் உயர் தலைவர் கமேனியின் மனைவி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிப்.28-ம் தேதி அன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த கமேனியின் மனைவி மன்சூர் கோஜஸ்தே பாகர்சாதே கோமா நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது. 1964-ம் ஆண்டு தனது 17 வயதில் கமேனியை அவர் திருமணம் செய்துள்ளார்.
News March 2, 2026
LNG உற்பத்தியை நிறுத்திய கத்தார்.. விலை உயர வாய்ப்பு

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு(LNG) ஆலையான ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக LNG உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக கத்தார் எரிசக்தி துறை அறிவித்துள்ளது. உலகின் 20% LNG உற்பத்தி கத்தாரிடம் இருப்பதால், அதன் விலை சர்வதேச அளவில் உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
News March 2, 2026
கூட்டணியில் இருந்து விலகினார்.. இபிஎஸ் ஷாக்

பாஜக, அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. EPS-ஐ சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி என அக்கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரை தற்காலிக சஸ்பெண்ட் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேவராஜன் அறிவித்துள்ளார். இதனால் EPS மற்றும் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.


