News June 26, 2024
தலைமை ஆசிரியர்களுக்கு ஜூலை 3 வரை அவகாசம்

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை, இணையத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம் ஜூலை 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 21இல் திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் விவரங்களை, ஜூன் 21-26 வரை பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
Similar News
News September 18, 2025
இனி அவர் முகமூடியார் பழனிசாமி: TTV

எடப்பாடி பழனிசாமியை இனிமேல் முகமூடியார் பழனிசாமி என அழைக்க வேண்டும் என்று TTV தினகரன் விமர்சித்துள்ளார். EPS செய்யும் துரோகத்தை சிலர் ராஜதந்திரம் என நினைப்பதாகவும், MGR, ஜெயலலிதா வெற்றிகண்ட இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற பார்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், என்னதான் பண பலம், படை பலம் இருந்தாலும் வரும் தேர்தலில் தோல்வியை தழுவுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
புரட்டாசி மாதத்தின் சிறப்பான பெருமாள் வழிபாடு!

அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து நீராடி, நெற்றியில் பெருமாளுக்குரிய திருநாமம் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டிலுள்ள பெருமாள் படத்திற்கு, வடை மாலை சாற்றி, நைவேத்தியமாக புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டலை படைக்கலாம். மாவிளக்கு போட வேண்டும். தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்ய வேண்டும். பிறகு, ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். SHARE.
News September 18, 2025
‘புலி’ டைரக்டருடன் இணையும் விமல்

இயக்குநர் சிம்புதேவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் விமல் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஃபைனான்சியருடன் இணைந்து சிம்புதேவனே இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக, இயக்கிய ‘போட்’ தோல்வியடைந்ததால், பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற சிம்புதேவனின் ஆசை பாழான நிலையில், தற்போது விமல் இணைந்துள்ளார்.