News June 26, 2024
T20 தரவரிசையில் முதலிடம் பிடித்த ஹெட்

ICC வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான T20 தரவரிசைப் பட்டியலில், ஆஸி., வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடித்துள்ளார். T20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், இந்தியாவுடனான சூப்பர்-8 சுற்றின் கடைசிப் போட்டியில் 76 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 844 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஃபில் சால்ட் ஆகியோர் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளனர்.
Similar News
News December 4, 2025
சரித்திரம் படைத்த மிட்செல் ஸ்டார்க்!

டெஸ்ட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸி.,யின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். அவர் 102 டெஸ்ட் போட்டிகளில் 415 விக்கெட்களை சாய்த்துள்ளார். முன்னதாக, பாக்., ஜாம்பவான் வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஸ்டார்க் 16-வது இடத்தில் உள்ளார்.
News December 4, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், EPS முன்னிலையில், திருவாரூர் நகர திமுக பிரமுகர் சின்னவன் பிரகாஷ் அதிமுகவில் இணைந்தார். அதேபோல், திண்டுக்கல் மதிமுக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அனீஸ் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், திண்டுக்கல் சீனிவாசன் முன்பு தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
News December 4, 2025
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா

திருப்பரங்குன்றத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக உத்தரவு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சுவாமிநாதன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், சுவாமிநாதன் மீது HC தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


