News March 14, 2025
மனைவியிடம் சில்மிஷம்: கணவன் தந்த தண்டனை

உ.பி.,யைச் சேர்ந்த சதீஷின் (45) மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஊழியராக இருந்த தர்மேந்திர மாவி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதை அப்பெண் கணவனிடம் கூற, அவர் உறவினர்களுடன் சென்று மாவியின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இது சரியான தண்டனை என்கின்றனர் நெட்டிசன்கள். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News March 26, 2026
திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி: விஜய்

மகளிர் பற்றி ஆபாசமாக பேசுவோர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில், என் அம்மா, அக்கா, தங்கைகளை திமுகவின் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி பேசியிருப்பதாக விஜய் கூறியுள்ளார். தவெகவை சீண்டுவதாக நினைத்து ஒட்டுமொத்த மகளிரை அவமதிக்கும் காரணத்தால், தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
News March 26, 2026
பாதியிலேயே யூ-டர்ன் எடுத்த Air India விமானம்

‘Air India’ நிறுவனத்திற்கு சொந்தமான A350 ரக விமானம் தலைநகர் டெல்லியிலிருந்து இன்று காலை 6 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டது. சவுதி அரேபிய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே பயணிகளின் பாதுகாப்பு கருதி, யூ-டர்ன் எடுத்த அந்த விமானம் சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் டெல்லியிலேயே பத்திரமாகத் தரையிறங்கியது.
News March 26, 2026
நடிகர் சேதுராமன் மரணம்.. மனைவி உருக்கம்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்ளிட்ட படங்களில் நடித்த டாக்டர் சேதுராமன் இளம் வயதிலேயே காலமானார். தனது கணவரின் மறைவு குறித்து உமா சேதுராமன் தற்போது உருக்கமாக பேசியுள்ளார். ‘அவர் (சேதுராமன்) மறைந்தபோது கர்ப்பமாக இருந்தேன். கையில் 1 வயது பெண் குழந்தையும் இருந்தது. இருப்பினும், சோர்ந்துவிடாமல் கணவர் விட்டுச் சென்ற கிளினிக்கை திறம்பட நடத்தி வருகிறேன்’ என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


