News June 5, 2024

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்

image

மக்களவைத் தேர்தலில், திமுக வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட அவர், 3,82,876 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை விட 4,633 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், 1,63,834 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளார்.

Similar News

News March 10, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரிவு!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. நேற்று காலை வர்த்தகத்தில் <<19333418>>பெரிய அளவில் குறைந்து<<>> மீண்டும் மாலை நேர வர்த்தகத்தில் 1 அவுன்ஸ் $5,170-ஐ கடந்தது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி $35 டாலர்கள் குறைந்து $5,135 ஆக உள்ளது. அதேநேரம், வெள்ளி விலை 1 அவுன்ஸ்-க்கு $3 உயர்ந்து $88 ஆக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இந்திய சந்தையில் இன்று வெள்ளி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

News March 10, 2026

கோடையில் உங்கள் மின் கட்டணத்தைக் குறைக்கனுமா?

image

✦டியூப்லைட் & குண்டு பல்புகளுக்கு பதிலாக LED பல்புகளை பயன்படுத்துங்கள் ✦முடிந்தவரை AC வெப்பநிலையை 24-26°C க்கு இடையே வைத்துக்கொள்ளுங்கள் ✦AC இயக்கத்தில் இருக்கும்போது குறைந்த வேகத்தில் விசிறியை இயக்கினால், அறை விரைவாக குளிர்ச்சியடையும் ✦15 நாட்களுக்கு ஒரு முறை AC காற்று வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள் ✦டிவி, லேப்டாப், மைக்ரோவேவ் போன்றவற்றை பயன்படுத்தாதபோது, முழுமையாக சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள்.

News March 10, 2026

LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

image

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வணிக <<19341813>>சிலிண்டர் <<>>விநியோகம் தடைபட்டதால், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, முழுமையாக வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!