News April 8, 2024
இந்திய அணியின் கேப்டனாக வருவார்

சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக வருவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். கேப்டனுக்கு உரிய அனைத்து திறமைகளும் அவருக்கு இருப்பதாக தெரிவித்துள்ள வாகன், இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தை அவர் அடைவார் எனக் கூறியுள்ளார். நேற்றைய லக்னோ அணிக்கு எதிராக போட்டியில் கில் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், வாகனின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Similar News
News April 3, 2026
முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்த வன்னியர் சங்கத்தினர்

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் பாமக (ராமதாஸ் அணி) சார்பில், வேட்புமனு தாக்கல் செய்த வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் நரசிம்மன், இன்று சாரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதரவாக வாக்குகளை சேகரிக்க உள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் உறுதி அளித்தார்.
News April 3, 2026
ராசி பலன்கள் (03.04.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News April 3, 2026
வேட்பாளர் பட்டியல் எப்போது வரும்? செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, 85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டதாகவும், இன்று இரவு (அ) நாளை காலை காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலை தலைமை வெளியிடும் எனவும் கூறியுள்ளார்.


