News April 5, 2024
தேர்தலுக்குப் பின் செல்லாக்காசாக மாறிவிடுவார்

தமிழக மக்களுக்கு பல முறை வேட்டு வைத்த பிரதமர் மோடிக்கு, மக்களவைத் தேர்தலில் நாம் வேட்டு வைக்க வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து டெல்டா மாவட்டங்களில் பிரசாரம் செய்து வரும் அவர், “தமிழகம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. அந்த 29 பைசா என்பது இன்று செல்லாக்காசு. வரும் தேர்தலுக்குப் பிறகு மோடியும் செல்லாக்காசாக மாறிவிடுவார்” எனக் கூறினார்.
Similar News
News March 28, 2026
BREAKING: தொகுதி மாறினார் செந்தில் பாலாஜி

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், செந்தில் பாலாஜியின் தொகுதி மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கில் கடந்த முறை வானதி வெற்றிபெற்ற நிலையில், இந்த முறை அதிமுகவின் வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர்களின் தொகுதிகள்!

கொளத்தூர் – ஸ்டாலின், சேப்பாக்கம் – உதயநிதி, மதுரை மத்தி – பிடிஆர், மதுரை கிழக்கு – பி.மூர்த்தி, ஒட்டன்சத்திரம் -சக்கரபாணி, திருமயம் – ரகுபதி, புதுக்கோட்டை – முத்துராஜா, லால்குடி – பாரிவள்ளல், திருவெறும்பூர் – அன்பில் மகேஸ், திருச்சி மேற்கு – கே.என்.நேரு, குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குன்னம் – சிவசங்கர் ஆகியோர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
திமுகவில் இணைந்தவர்களுக்கு சீட்

திமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். குமரி – மகேஷ், நாகர்கோவில் -ஆஸ்டின், ராதாபுரம் – அப்பாவு, நெல்லை – சுப்பிரமணியன், ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன், போடி- ஓபிஎஸ், ஒரத்தநாடு – வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


