News April 12, 2024
இந்தியாவின் ஹிட்லராக நினைக்கிறார்

மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் உயர்வதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஹிட்லர் போல தன்னை நினைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என மோடி நினைப்பதாக குற்றம்சாட்டிய அவர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் தேர்தலே இருக்காது என்றார். மேலும், ஜனநாயகத்தை காக்க மோடியை தோற்கடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 4, 2026
திமுக எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்க: ஆதவ் அர்ஜுனா

கரூரில் தனியார் TV செய்தியாளர், ஒளிப்பதிவாளரை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளார். வீடியோ ஆதாரங்கள் இருந்தும் ஒருவாரமாக இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க அஞ்சுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக பழனியாண்டி மீது நடவடிக்கை எடுக்க திருச்சி MP துரை வைகோவும் வலியுறுத்தியிருந்தார்.
News February 4, 2026
கூட்டணியால் காங்., பலவீனம்: பிரவீன்

தமிழகத்தில் காங்கிரஸுக்கு 12% வாக்கு வங்கி இருக்கிறது; ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணி அரசியலால் காங்கிரஸ் பலவீனமாகி வருவதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா, உ.பி., பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்., பலவீனமாகி வருகிறது என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் வந்துவிட்டது; கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸின் உண்மையான பலமே வேறு எனவும் கூறியுள்ளார்.
News February 4, 2026
15 நாட்களில் 509 பெண்கள் மிஸ்ஸிங்!

தலைநகர் டெல்லியில் 2026-ம் ஆண்டின் முதல் 15 நாள்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் & சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி போலீஸ் தரவுகளின்படி, 509 பெண்கள் உள்பட மொத்தம் 807 பேர் காணாமல் போனதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் இதுவரை 235 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் அங்கு சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் மாயமாகியுள்ளனர்.


