News April 25, 2024
அரை சதம் கடந்தார் படிதார்

ஹைதராபாத் அணிக்கு எதிரான IPL போட்டியில் அதிரடியாக ஆடிவரும் RCB வீரர் ரஜத் படிதார் அரை சதம் கடந்துள்ளார். 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி வாணவேடிக்கை காட்டினார். இவரது அதிரடியால் RCB அணி 12 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. டு ப்ளஸி 25, ஜாக்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். கோலி 45* ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று RCB எவ்வளவு ரன்கள் எடுக்கும்?
Similar News
News March 7, 2026
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பழங்குடியின மாணவன் சாதனை.

ஆண்டுதோறும் ரூ.1000 விதம் 4 ஆண்டுகளுக்கு வழங்க நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வு தேர்வு கடந்த டிச.25ல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவன் நாக பிரசாந்த் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
News March 7, 2026
மார்ச் 15-ல் தேர்தல் தேதி?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி வரும் 15 அல்லது 16-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் தனது ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று முடிக்கிறார்கள். நாளை முதல் 3 நாள்களுக்கு மேற்குவங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 5-7 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News March 7, 2026
3 நாள்களுக்கு மட்டும் இதை செய்யுங்க.. அப்புறம் பாருங்க!

எப்போதும் போனும் கையுமாகவே இருக்கிறீர்களா? இது உங்கள் மூளை திறனை அதிகமாக பாதிக்கும். எனவே, குறைந்தது 3 நாள்களுக்கு போனை நோண்டாமல் இருந்தால் மூளையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவது ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் யூனிவர்சிட்டி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உங்கள் ஞாபக சக்தியும், உடல்நலனும் கூட மேம்படலாம். எனவே இன்றிலிருந்தே இதை ட்ரை பண்ணுங்க மக்களே.. நண்பர்களுக்கு SHARE THIS.


