News June 18, 2024

வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்த ராகுல்

image

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து, அங்கு அவரது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 14, 2025

TN டி20 அணிக்கு வருண் சக்ரவர்த்தி கேப்டன்

image

சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வரும் நவ.26 முதல் டிச.18 வரை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான TN அணியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாயாஜால சுழற்பந்து வீச்சால் அசத்தி வரும், வருண் சக்ரவர்த்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜெகதீசன்,ஷாருக்கான், சாய் கிஷோர், நடராஜன், குர்​ஜப்​னீத் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

News November 14, 2025

தங்கம் விலை உயர்வு.. ஊரை காலி செய்யும் தொழிலாளர்கள்

image

தங்கம் விலை உயர்வால், மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் புகழ் பெற்ற கோவையில் மட்டும், போதுமான பணி ஆணைகள் கிடைக்காமல், பிற மாவட்டங்களை சேர்ந்த 10,000 பொற்கொல்லர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுப நிகழ்வுகளுக்காக நகை வாங்குபவர்களால் மட்டும் ஓரளவு வியாபாரம் நடப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

News November 14, 2025

TN-ல் டெலிவரி வேலை செய்யும் இளம் டாக்டர்கள்

image

`உனக்கு என்னப்பா டாக்டரா இருக்க, நல்லா சம்பாதிப்ப’ என இனி சொல்லாதீர்கள். ஏனென்றால் TN-ல் இளம் டாக்டர்களின் நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இளம் டாக்டர்களுக்கு ₹15,000 தான் சம்பளமாக கிடைப்பதாகவும், ₹30,000-ஐ எட்டுவதற்குள் 30 வயது ஆகிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கேப்/பைக் டிரைவர், டெலிவரி மேன் வேலைகளுக்கும் MBBS படித்த இளம் டாக்டர்கள் செல்லும் நிலை உள்ளதாம்.

error: Content is protected !!