News April 15, 2024
அவர் 75% தொகுதி நிதியை செலவு செய்யவே இல்லை

தயாநிதி மாறன் தனது தொகுதி நிதியில் இருந்து 75% செலவு செய்யவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தில் பேசிய அவர், இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், இந்திய அளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் பட்டியலில் உள்ளவர். அவர் மேலும் சொத்து சேர்ப்பதற்காகவும், சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தேர்தலில் போட்டியிடுகிறார் என விமர்சித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
ராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில்

ராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி டிச.02, 09 ஆகிய தேதிகளில் இராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:10 க்கு திருப்பதி சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து டிச.03,10 ஆகிய தேதிகளில் காலை 11:15 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:45 இராமேஸ்வரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
News November 27, 2025
அழுகிய பழங்களை சாப்பிட்டு.. WC கேப்டனின் சோகம்!

கிரிக்கெட் என்றாலே காசு கொழிக்கும் விளையாட்டு என கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். WC-யை வென்ற இந்தியா பெண்கள் பார்வையற்றோர் அணியின் கேப்டன் தீபிகாவின் கருத்துக்கள் நம்மை அதிர வைக்கிறது. அவர் சிறுவயதில் அழுகிய பழங்களின் கெட்ட பாகங்களை நீக்கிவிட்டு மீதியை சாப்பிட்டு வளர்ந்ததாக கூறினார். இது அணியின் அனைத்து வீரர்களும் எதிர்கொண்ட நிலைதான் என்ற அவர், அதில் தற்போதும் பெரிய மாற்றம் இல்லை என தெரிவித்தார்.
News November 27, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து ₹94,160-க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹11,770-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியதால், நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


