News April 8, 2024
விபத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை

விபத்தில் இருந்து தான் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். முகத்தில் தற்போது கூட ஐந்தாறு பிளேட் இருக்கிறது. நான் பேசுவதை நன்றாக கவனித்தால் ஒரு சில வார்த்தைகளை உச்சரிப்பதற்கு சிரமப்படுவதைப் பார்க்கலாம் என்ற அவர், விபத்தில் ஏற்பட்ட அழுத்தம் குறைந்து தற்போது பாசிட்டிவாக இருப்பதாக கூறினார். மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்த போது அவர் விபத்தில் சிக்கினார்.
Similar News
News January 17, 2026
டிரம்ப் முடிவால் இந்தியாவுக்கு பின்னடைவு

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதலாக வரிவிதிக்கப்படும் என <<18842996>>டிரம்ப்<<>> எச்சரித்திருந்த நிலையில், இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. <<18868892>>ஈரானில்<<>> பல ஆயிரம் கோடி மதிப்பில் அமைத்து வந்த சபஹார் துறைமுகத்தில் இருந்து வெளியேறும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், ஏப்ரல் வரை டிரம்ப் கால அவகாசம் கொடுத்துள்ளதால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News January 17, 2026
கடைசி போட்டியிலாவது விளையாட விடுங்கள்: அஸ்வின்

நியூஸி.,க்கு எதிரான 2 ODI-களிலும் அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்க்காதது குறித்து அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 3-வது போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர் இந்த இடத்தை அடைய கடுமையாக உழைத்துள்ளார். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு அவர் உறுதியான பங்களிப்புகளை செய்திருந்தும், அணியில் இடம் கிடைப்பது தொடர் போராட்டமாகவே இருந்து வருவதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.