News September 26, 2025
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான சீர்காழி நகர்மன்ற செயலாலர் ஜெ.பாலகிருஷ்ணன், CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது தலைமையில், சீர்காழி நகர துணை செயலாளர் பரணிதரன், சீர்காழி நகர்மன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வனும் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தை போல டெல்டாவையும் திமுக குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.
Similar News
News September 26, 2025
அழைப்பு விடுத்தால் காஷ்மீர் பிரச்னையை டிரம்ப் தீர்ப்பார்

இந்தியா-பாக். இடையேயான காஷ்மீர் பிரச்னையில் டிரம்ப் தலையிட விரும்பவில்லை என USA அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு தீர்க்க வேண்டிய பஞ்சாயத்துகள் பல இருப்பதாகவும், ஆனால் அழைப்பு விடுத்தால் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க டிரம்ப் வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியா-பாக் போரை நான்தான் நிறுத்திவைத்தேன் என டிரம்ப் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
News September 26, 2025
ஒரு ஆடை விலை ₹2,500-க்கு மேல் இருந்தால் மட்டுமே 18% GST

ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்கள், ஆடைகளை பிரித்து ₹2500-க்குள் தனித்தனியாக பில் போட வேண்டும் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால், இது உண்மையில்லை. ஒவ்வொரு துணிக்குமான விலை, அதற்கான <<17832643>>GST <<>>என்றுதான் பில் போடுவார்களே தவிர, மொத்தமாக கணக்கிட்டு, மொத்த விலைக்கு GST போட மாட்டார்கள். ஆனால், ஒரு ஆடையின் விலை மட்டும் ₹2,500-க்கு மேல் இருந்தால் 18% GST, ₹2,500-க்குள் இருந்தால் 5% GST வசூலிக்கப்படும்.
News September 26, 2025
தீபாவளிக்கு ₹2500-க்குள் துணி எடுக்கணுமா?

தீபாவளி பண்டிகை வரவிருப்பதால், ஜவுளிக்கடைகளில் இப்போதே கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது. இந்நிலையில், ஆடைகளுக்கு ₹2500-க்கு மேல் பில் செய்தால் 18% gst, ₹2500-க்குள் இருந்தால் 5% gst வசூலிக்கப்படுகின்றது. அதனால், ₹6 ஆயிரத்திற்கு ஆடைகள் வாங்கினாலும் கூட, பில்லை 3-ஆக பிரித்து (எ.கா. ₹2,500,₹,2000, ₹1,500) பணம் செலுத்த வேண்டும் என்ற தவறான தகவல் பரவி வருகிறது.