News April 5, 2024
தேர்தலுக்காக தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வருகிறார்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் இதுதான் என எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். விருதுநகரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழ்நாட்டிற்கு பாஜக அரசால் எந்த திட்டமும் வராது. மழை, வெள்ளம் வந்தால், நிவாரணம் கூட வராது. நாம் கஷ்டப்பட்ட சமயத்தில் ஒரு முறை கூட வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வருகிறார்” எனத் தெரிவித்தார்.
Similar News
News January 23, 2026
Sports 360°: பி.வி.சிந்து அபார சாதனை

*பேட்மிண்டன் வரலாற்றில் 500 வெற்றிகளை பதிவு செய்த முதல் IND வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார். *முதல் தர கிரிக்கெட்டில் ஜலஜ் சக்ஸேனா 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். *இங்கி.,க்கு எதிரான முதல் ODI-ல் 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி. *இந்தோனேஷிய பேட்மிண்டனில் லக்ஷயா சென் காலிறுதிக்கு தகுதி. *ரஞ்சி போட்டியில் ஒடிசாவுக்கு எதிராக TN முதல்நாள் முடிவில் 281 ரன்கள் எடுத்துள்ளது.
News January 23, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 589 ▶குறள்: ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். ▶பொருள்: ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.
News January 23, 2026
அன்பே ஆருயிரே அனுபமா!

‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அனுபமா பரமேஷ்வரன், பைசனுக்கு பிறகு கனவுக்கன்னியாக மாறிவிட்டார். SM-ல் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், சமீபத்தில் பதிவிட்ட போட்டோக்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இதற்கு ❤️❤️❤️ விடும் ரசிகர்கள், அவரது அடுத்த பட அப்டேட்களை கேட்டு அன்புத் தொல்லை கொடுக்கின்றனர். அந்த போட்டோக்களை மேலே SWIPE செய்து பார்க்கவும்.


