News October 16, 2025

பல ரவுடிகளை பார்த்தவன்: அண்ணாமலை

image

சாமானிய மனிதனை திருமாவளவன் சென்ற கார் இடித்து தள்ளியதை பற்றி கேட்டால் மிரட்டுவதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற வெறுப்பு அரசியல், மிரட்டுவதை விட்டுவிட்டு நாகரிகமான அரசியலுக்கு திருமாவளவன் முன் வர வேண்டும் எனவும், வன்முறை அரசியலால் யாருக்கு என்ன லாபம் என்றும் அவர் வினவியுள்ளார். மேலும், போலீசாக பல ரவுடிகளை டீல் செய்த தன்னிடம், இந்த வேலையெல்லாம் பலிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

2027 உலகக் கோப்பையில் விராட்: தினேஷ் கார்த்திக்

image

2027 உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஆஸி.,க்கு எதிரான தொடரில் விராட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லையென்றால், உலகக் கோப்பையில் விளையாடுவது கடினம் என்று கூறப்படும் நிலையில் DK இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், லண்டனில் அவர் கடுமையாக பயிற்சி எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

News October 16, 2025

மன்னிப்பு கேட்டார் மாரி செல்வராஜ்

image

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘பைசன்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். தமிழ்நாட்டை கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியதால் தான் இப்படி பெயர் வைத்ததாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், தன்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் ‘காளமாடன்’ என்றுதான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

புதிய மழை அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை

image

கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. ஏற்கெனவே, மழை எதிரொலியாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!