News August 19, 2024
அவருக்கும் NCCக்கும் எந்த தொடர்பும் இல்லை

கிருஷ்ணகிரியில் எந்த NCC முகாமும் நடக்கவில்லை என NCC தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை புகாரில் தொடர்புடைய நபருக்கும் NCCக்கும் எந்த தொடர்புமில்லை எனவும் கூறியுள்ளது. போலியாக NCC முகாம் நடத்தி பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகி <<13891818>>சிவராமன்<<>> கைது செய்யப்பட்டார். தனியார் பள்ளியில் அவர் போலியாக முகாம் நடத்தியது அம்பலமாகியுள்ளது.
Similar News
News March 15, 2026
அதிமுக + விஜய்.. EPS முடிவை கூறினார்

NDA கூட்டணியில் தவெகவை இணைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக EPS-யிடம் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. விஜய்யிடம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை என EPS திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் தவெக, NDA கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு குறைவு என்பதால், விஜய் தனித்தே களம் காண்பார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 15, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 15, பங்குனி 1 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM & 3:30 PM – 4:30 PM▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்:4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்:12:00 PM – 1:30 PM ▶குளிகை:3:00 PM – 4:30 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News March 15, 2026
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு எப்போது?

திமுகவின் தேர்தல் அறிக்கையை கனிமொழி தலைமையிலான குழு தயாரித்து வருகிறது. இதனிடையே திமுகவின் தேர்தல் அறிக்கையை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக CM ஸ்டாலினிடம் கனிமொழி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் தேர்தல் அறிக்கை ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் அறிக்கையை வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.


