News April 15, 2025
என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
Similar News
News December 9, 2025
அரியலூர்: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: இங்கே <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.
News December 9, 2025
நார்த்தங்காயின் நன்மைகள்

நார்த்தங்காயில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி & பி அதிகம் நிறைந்துள்ளது. நார்த்தங்காய் ஊறுகாய் போட மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


