News March 28, 2024
கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மழுப்புகிறார்

கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கெஜ்ரிவால் மழுப்புவதாக டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய ED, மேலும் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி கேட்டது. அப்போது, டிஜிட்டல் சாதனங்களின் பாஸ்வேர்டை தர அவர் மறுப்பதாக குற்றம்சாட்டினர். இதனிடையே, முகாந்திரம் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக கெஜ்ரிவால் தரப்பு கூறியுள்ளது.
Similar News
News February 3, 2026
விழுப்புரத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News February 3, 2026
கூட்டணி அறிவிப்பு; பிரேமலதா முடிவை மாற்றியது ஏன்?

பிப்.3-ல் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்த <<19037842>>பிரேமலதா<<>>, தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் சீட் விவகாரம் என சொல்லப்படுகிறது. தேமுதிகவை கூட்டணியில் இணைக்க விரும்பினாலும், திமுக(6), அதிமுக(9+1) தொகுதிகள்தான் தர முடியும் என கறாராக சொல்லிவிட்டார்களாம். இதனால், கூட்டணி அறிவிப்பை தாமதப்படுத்தியுள்ள பிரேமலதா, அதிமுகவா, தவெகவா என கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கிறாராம்.
News February 3, 2026
தவறாக தொட்டவனை பளாரென அடித்த நடிகை ரேவதி

பள்ளிப் பருவத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை ரேவதி மனம் திறந்துள்ளார். அதில், 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தன்னை பஸ்ஸில் ஒருவன் தவறாக தொட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்திலேயே அவனை பளாரென அடித்ததாகவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அம்மா கொடுத்த தைரியத்தாலேயே இப்படி செய்ததாகவும் ரேவதி கூறியுள்ளார்.


