News May 16, 2024
Virtual கிரெடிட் கார்டை அறிமுகம் செய்தது HDFC

இந்தியாவின் நம்பர் 1 தனியார் வங்கியான HDFC, விர்ச்சுவல் கிரெடிட் கார்ட் சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார்டுகளை கைகளில் வாங்க முடியாது. ஆனால், கார்டு நம்பர், CVV ஆகியவை உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அதனை பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தலாம். Visa கார்ட் நிறுவனத்துடன் இணைந்து HDFC இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.
Similar News
News December 2, 2025
வேண்டுதலுக்காக தலையில் தீபம் ஏற்றும் பக்தர்கள்!

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள விஸ்வநாதர் சமேத விசாலாட்சி திருக்கோயிலில் எங்குமில்லாத வகையில் சிறப்பு வழிபாடு முறை ஒன்று உள்ளது. இங்கு பக்தர்கள் தங்களது உச்சந்தலையில் விளக்கை ஏந்தியபடி வேண்டுதலில் ஈடுபடுகின்றனர். மனக்குழப்பம், கிரக தோஷம் உள்ளவர்கள் நெய் தீபங்களை ஒரு தட்டில் வைத்து, அதை தலையில் வைத்துக் கொண்டு பூஜை நேரத்தில் வழிபடுகின்றனர். பூஜை முடியும் வரை தீபங்களை கீழே வைக்க மாட்டார்கள்.
News December 2, 2025
Cinema 360°: ரீ-ரிலீசாகும் விஜய்யின் ‘காவலன்’

*டிச.8-ம் தேதி சிம்புவின்’அரசன்’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல். *ரஷ்மிகா மந்தனாவின் ‘தம்மா’ இன்று முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. *’டியூட்’ OST இன்று வெளியாகும் என சாய் அபயங்கர் அறிவிப்பு. *டிச.5-ம் தேதி விஜய்யின் ‘காவலன்’ ரீ-ரிலீசாகும் என தகவல். *ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிச.12-ம் தேதி ‘எஜமான்’ ரீ-ரிலீஸ் ஆகிறது. *லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தில் ஷாம் வில்லனாக நடித்துள்ளார்.
News December 2, 2025
தமிழகத்தில் இன்றும் மழை வெளுக்கும்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல் வடதிசையில் நகர்ந்து, தற்போது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த நகர்வு காரணமாக இன்றும் TN-ல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆந்திர கடலோர பகுதியின் ஊடாக பயணித்து மேலும் வலுவிழக்ககூடும்.


