News April 10, 2025
HDFC வங்கி சேவைகள் இயங்காது

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, தங்களது சேவைகளை மேம்படுத்த சிஸ்டம் பராமரிப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் 12ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை (4 மணி நேரம்) இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில், தங்களது வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு UPI சேவைகள் இயங்காது என்று HDFC அறிவித்துள்ளது. கவனமாக இருங்கள் வாடிக்கையாளர்களே.
Similar News
News January 28, 2026
துணை முதல்வர் அஜித் பவாருடன் பலியான 4 பேர் யார்?

பாராமதி விமான விபத்தில் பலியான 5 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. DCM அஜித் பவாருடன், விதிப் யாதவ், பிங்கி மாலி மற்றும் விமானிகள் சுமித் கபூர், சம்பவி பதக் ஆகியோர் அகால மரணமடைந்துள்ளனர். அவர்களது உடல்கள் பாராமதியில் உள்ள ஹாஸ்பிடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு BJP, NCP உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
News January 28, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹13,000 உயர்ந்தது

தங்கம் விலையை தொடர்ந்து இன்று (ஜன.28) வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹13 உயர்ந்து ₹400-க்கும், 1 கிலோ வெள்ளி ₹13,000 உயர்ந்து ₹4 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News January 28, 2026
விபத்துக்கான காரணம் அறிய மீட்கப்பட்ட Black box!

அஜித் பவார் விமான விபத்திற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், விமானத்தின் ‘Black box’ மீட்கபட்டுள்ளதாம். அதனை சரிபார்த்த பிறகே, என்ன பிரச்னை ஏற்பட்டது என்பது தெரியவரும். இந்த ‘Black box’-ல் விமானத்தின் வேகம், எரிபொருள் உள்பட சுமார் 80 டெக்னிக்கல் விவரங்களில் தொடங்கி, விமான காக்பிட்டில் கேட்கும் சத்தம் முதல் கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தல்கள் வரை அனைத்தும் ரெக்கார்ட்டாகி இருக்கும்.


