News August 10, 2024

HCL நிறுவனத்தில் வேலை

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 17, 2025

புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

திருமயம் அருகே மணவாளக்கரை சேர்ந்த விஜயன் 58, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமான நிலையில் அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 17, 2025

புதுகை: மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்தவர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ஈபி அலுவலகம் அருகே, பெரியசாமி (38) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் மாத்தூர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.

News November 17, 2025

புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி, கொடிகுளம், ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!