News August 20, 2025

அந்தரங்க வீடியோ பதிவை AI மூலம் தடுக்க ஐகோர்ட் உத்தரவு

image

ஆன்லைனில் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை AI மூலம் தடுக்க TN DGP-க்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட், ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் 8 இணையதளங்களை முடக்க மத்திய அரசுக்கும், AI வாயிலாக ஆன்லைன் மோசடியை தடுப்பது போல் ஆபாச வீடியோக்கள் பதிவை தடுக்க வேண்டும் என மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 20, 2025

CM ஸ்டாலின் முடிவே என் முடிவு: கமல்ஹாசன்

image

துணை ஜனாதிபதி தேர்தலுக்காக NDA கூட்டணி சார்பில் CPR-யும், இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவை சேர்ந்த சுதர்சன ரெட்டியும் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த CPR தேர்தலில் போட்டியிடுவதால் தமிழக எம்.பிக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்புள்ளது. இதுபற்றி பேசிய கமல்ஹாசன், துணை ஜனாதிபதி தேர்தலில் CM ஸ்டாலின் முடிவுதான் எனது முடிவு என கூறியுள்ளார்.

News August 20, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 20 – ஆவணி 4 ▶ கிழமை: புதன் ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶ எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: துவாதசி ▶ சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News August 20, 2025

உலக புகைப்பட தினம்: போட்டோ எடுத்து மகிழ்ந்த EPS

image

உலக புகைப்பட தினமான நேற்று வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் இபிஎஸ். அப்போது, கூட்டத்தில் உரையாடிய பின், பிரச்சார வாகனத்திலிருந்த போட்டோகிராபரிடம் கேமராவை வாங்கி, அங்கு கூடியிருந்த மக்களை இபிஎஸ் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதனைப் பார்த்த மக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், தனது X பக்கத்திலும் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். Share it!

error: Content is protected !!