News August 15, 2024

NLC வேலைநிறுத்த போராட்டத்திற்கு HC தடை

image

NLC ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17ஆம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும், பணி நிரந்தரம் செய்ய NLC நிர்வாகம் மறுப்பதாக கூறி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக நோட்டீஸ் அளித்திருந்தனர். இதை எதிர்த்து NLC தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போராட்டத்திற்கு தடை விதித்தது.

Similar News

News November 26, 2025

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு

image

இந்திய அரசியலமைப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் Dr. சரத் சவுகான், இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசிக்க தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அரசுச் செயலர் விக்ராந்த் ராஜா முகவுரையை தமிழில் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

News November 26, 2025

BIG BREAKING: விஜய்யை சந்தித்தார் செங்கோட்டையன்

image

அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த கே.ஏ.செங்கோட்டையன் சற்றுமுன், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். நாளை தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். காலையில், செங்கோட்டையன் தனது அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த பிறகு, திமுக தரப்பிலும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

News November 26, 2025

6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6 மிரட்டல் அடி

image

சையது முஷ்டாக் அலி கோப்பையில் குஜராத் கேப்டன் உர்வில் படேல் 31 பந்துகளில் சதம் அடித்துள்ளார். அவர் மொத்தமாக 37 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 119* ரன்களை குவித்தார். முதலில், சர்வீசஸ் அணி 20 ஓவர்களில் 182/9 ரன்கள் எடுத்தது. உர்வில் படேலின் அபாரமான ஆட்டத்தின் மூலம், 12.3 ஓவர்களில் குஜராத் எளிதில் வெற்றி பெற்றது. 2024-ம் ஆண்டு தொடரிலும், உர்வில் 28 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

error: Content is protected !!