News September 6, 2025
சம்பளத்துடன் கூடிய விடுமுறை.. ஐகோர்ட் புதிய உத்தரவு

3-வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என HC கூறியுள்ளது. உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் உதவியாளராக பணியாற்றும் ரஞ்சிதா கோரிய 3-வது பிரசவத்திற்கான மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த HC, குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு இது ஆதரவாகவே இருக்கும் என கூறி, விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
AI புரட்சி… ஒரே ஆண்டில் 46 புதிய கோடீஸ்வரர்கள்

கடந்தாண்டு AI காரணமாக புதிதாக 46 பில்லியனர்கள் உருவாகியுள்ளதாக ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2026 அறிக்கை தெரிவித்துள்ளது. உலகளவில் 4,020 பில்லியனர்களில் AI தொழிலுடன் தொடர்புடைய பில்லியனர்களின் எண்ணிக்கை 114 ஐ எட்டியுள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் 2 பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். தற்போது Nvidia CEO ஹுவாங்கின் சொத்து மதிப்பு 34% அதிகரித்து ₹14.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
News March 9, 2026
ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்யுங்க: அன்புமணி மனு

பாமகவின் பெயர், கொடி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி மனு தாக்கல் செய்துள்ளார். வயது, மருத்துவ காரணங்களால் ராமதாஸ் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை; இதனை பயன்படுத்தி சிலர் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள், பாமகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
News March 9, 2026
குடும்பம் தானே எல்லாம்… வைரல் PHOTOS

T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினரின் கொண்டாட்ட போட்டோக்கள் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரல். தங்களின் கடின உழைப்பின் பலனாக பெற்ற மாபெரும் வெற்றியை சக அணியினருடன் மட்டுமல்லாமல் குடும்பத்தினருடனும் சேர்ந்து கொண்டாடினர். வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி பொங்கிய போட்டோஸை மேலே இணைத்துள்ளோம். இடப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.


